நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாதர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகூரில் நாகவல்லி சமேத நாகநாதசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் நாகநாதர் எழுந்தருள, தேரடி வீதியில் திரண்ட பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்ததால், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.