சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் விமரிசையாக நடைபெற்றது.
கீழவலையம்பட்டியில் மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி, இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பின்னர் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.