அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ள தீர்மானிப்போம் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு யோகா செய்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துத்ளள பதிவில், ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும், குறிப்பாக இந்தியாவின் சக குடிமக்களுக்கும் சர்வதேச குடியரசு தலைவர் யோகா தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
யோகா என்பது மனிதகுலத்திற்கு இந்தியாவின் தனித்துவமான பரிசு என்றும், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, யோகா இன்று மிக முக்கியமான அங்கமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
யோகா உடல், மனம் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான வழி என்றும், நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ள தீர்மானிப்போம் என்றும் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டுள்ளார்.