முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில், டெல்லியில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து எல். முருகன் தனது எக்ஸ் பதிவில்,
ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோன்ற மாண்புமிகு தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது. உங்களுடனான ஆக்கப்பூர்வ சந்திப்பிற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.