உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தென்கொரியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதின், அங்கிருந்து வியட்நாம் சென்றுள்ளார். இதனிடையே, வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் செய்தியாளர்களை சந்தித்த புதின், உக்ரைனுக்கு தென்கொரியா தொடர்ந்து ஆயுதங்களை விநியோகித்து உதவினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உதவினால், வடகொரியாவுக்கு ஆயுதங்களை விநியோகித்து ரஷ்யா உதவும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.