வடகொரியா அதன் எல்லையில் சுவர் எழுப்பி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வந்தாலும், குறிப்பிட்ட பகுதியில் 4 கிலோமீட்டர் சுற்றளவில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படாமல், அமைதி பூங்காவாக திகழ்கிறது.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் வடகொரியா சுவர் எழுப்புவது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம் ராணுவமற்ற அந்தப் பிராந்தியத்தில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைக் குவிக்க வடகொரியா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.