கள்ளச்சாராய மரணங்கள் சமூகப் போராளிகள் கப்சிப்!
Mar 16, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய மரணங்கள் சமூகப் போராளிகள் கப்சிப்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த காலங்களில், இந்துக்களுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அடிக்கடி, பொங்கி எழுந்து குரல் கொடுத்த சமூகப் போராளிகளாக தம்மைக் காட்டிக் கொண்ட தமிழ்த் திரைப் பிரபலங்கள், இப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய மரணங்களுக்குக் குரல் கொடுக்காமல் மௌனம் காப்பது ஏன் ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்துக்குப் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்தி வரும் நிலையிலும், கள்ளச் சாராயமும் குடித்து மக்கள் உயிரிழக்கும் அவலமும் நடக்கிறதே என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.

ஒரே நேரத்தில், இத்தனை உயிர்கள் அநியாயமாக பலியாகியிருக்கும் நிலையில், ஒன்றிரண்டு திரைப் பிரபலங்கள் தவிர, மற்ற திரைப் பிரபலங்கள் யாருமே இது குறித்து எதுவுமே பேசாதது பலருக்கும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் கார்த்தி,

எப்போதுமே பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களைப் பேசும் நடிகர் பிரகாஷ் ராஜ்,

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்து மதத்தைத் தரக் குறைவாக பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ்,

சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடங்கி மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சிக்கும் நடிகர் சித்தார்த், இந்தி தெரியாது போடா என டீ ஷர்ட் அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரெல்லாம் இப்போது எங்கே போனார்கள் ? என மக்கள் தேடுகின்றனர்.

அதே போன்று கடந்த காலங்களில் மதுவிலக்கு தொடர்பாக சமூக வளைதளங்களில் பாடல்களை வெளியிட்டு குரல் எழுப்பிய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கோவன் போன்றவர்கள் எங்கே? என்றும் கேட்டுள்ளனர்.

கடந்த காலங்களில், இந்த போலி சமூகப் போராளிகள் எந்தெந்த விஷயங்களில் என்னென்ன சொன்னார்கள் ? என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகவும் வைரலாகி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், மதுவிலக்கு கோரிக்கை போராட்டம், என்று சினிமா வசனம் பேசுவது போல், கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த போலி சினிமா பிரபலங்கள், இப்போது மௌனமாக இருப்பது, அவர்களின் திமுக சார்பு நிலையைக் காட்டுகிறது என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

Tags: Counterfeit Deaths Social Militants Cupchip!
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாடத்திட்டத்தில் யோகா இடம்பெற வேண்டும்!- அண்ணாமலை

Next Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies