நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் இன்று. திரைத்துறையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..!
இன்னெக்கே எல்லாத்தையும் சாதிக்கன்னுன்றது இல்ல கண்டிப்பா எல்லாத்தையும் சாதிப்போன்னு இருக்குறவங்களுக்கு எடுத்துக்காட்டு விஜய்.
விஜயகாந்த் நடிப்புல வெளியான வெற்றி படத்துல சின்ன வயசு விஜயகாந்த நடிச்சிருப்பாறு விஜய். இந்த படத்துக்கு விஜய் வாங்குன முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா 500 ருபாய். அதுக்கு அப்பறம் சில படங்கள் குழந்தை நட்சத்திரமா நடிச்சிட்டு ஒரு வழியா 18 வயசு ஆச்சு நம்மளும் ஹூராவா பன்லான்னு நடிச்சது தான் நாளைய தீர்ப்பு. ஆனா மக்கள் கிட்ட இருந்து வந்த தீர்ப்பு உருவ கேலி, நடிக்க தெரியலன்னு பல பேச்சுகள்.
இந்த பேச்ச எல்லாம் காதுல போட்டுக்காம தம்மையும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில பயணிச்சிட்டு இருந்த விஜய்க்கு செந்துர பாண்டியன் படம் பயங்கர உதவியா இருந்துச்சு. இதுக்கு இன்னொரு காரணம் விஜயகாந்த்துன்னு சொல்லலாம். இதுவர பல படங்கள் ஹிட் கொடுத்த இயக்குநர் சந்திரசேகருக்காக விஜயகாந்த் நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதுக்கு பிறகு ரசிகன். இங்க தான் பாக்ஸ் ஆபிஸ்ல படம் நல்லா போக… பரவலா விஜய்ய பத்தி நல்ல விதமா பேச ஆரம்பிக்கிறாங்க.
அதுக்கு பிறகு லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷின்னு அடுத்தடுத்த படங்கள் விஜய்க்கு கைக்கொடுக்க ஒரு ஸ்டேபில் ஆன ஆடியன்ஸ் வர ஆரம்பிச்சாங்க.
இன்னமும் வின்டேஜ் தளபதிய பாக்கனும்னா கன்னுக்குள் நிலவு, மின்சார கனவு படங்களுல பாத்துப்போம் ஏன்னா அப்ப இருந்த யூத்லருந்து இப்ப இருக்குற யூத் வர விஜய்யோட ஸம்லுக்கே பல Fans இருக்காங்க.
ஒரு கட்டத்துல அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுக்க ஆரம்பிச்சுச்சு விஜய்க்கு ப்ரெண்ட்ஸ் பத்ரி சாஜகான்னு. முக்கியமா சொல்லனுன்னா லவ் ஸ்டோரி பேஸ் பன்னி நடிக்கிறதுலாம் செம்ம ஹிட்.
இதுமட்டுமா திருமல, கில்லி, திருப்பாச்சி, சச்சின் இந்த படங்களுல எல்லாம் விஜய்யோட ட்ராக் யூத் பல்ஸ்ஸ பிடிக்கிற மாதிரி இருந்துச்சு.
அதுக்கு அப்பறம் போக்கிரி, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன்னு நெகடிவ் ரோல்ல நடிக்க ஆரம்பிச்சாரு விஜய் பக்காவா சொல்லனுன்னா நண்பர் அஜித் போல. அஜித் நெகடிவ் படங்கள் நடிக்கிறதுலாம் ஹிட் ஆனா விஜய்க்கு பெருசா கைக்கொடுக்கல.
அதுக்கு அப்பறம் ஒரே வழில பயணிக்காம நண்பன், காவலன், வேலாயுதம்னு எல்லா ரோல்லையும் தலகாட்ட ஆரம்பிச்சாரு விஜய். இருந்தாலும் விஜய்க்கு கம்பேக்னா துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் ஹாரிஸ் ஜெயராஜ் ஓட சிறப்பான சம்பவத்துல விஜய்யோட நடிப்பு தியேட்டர கலக்கிருச்சு.
ஏற்கனவே அரசியல் ஆசைகள் இருந்த விஜய்க்கு நமக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க அப்போ அவுங்களுக்காக அரசியல் கண்டென்ட் உள்ள படங்கள் நடிக்க ஆரம்பிக்கிறாரு விஜய். தலைவா லருந்து இன்ன வர அரசியல் சம்பந்தமான பேச்சுகள் பாடல்கள் படத்துல இல்லாம இருக்காது.
இருந்தாலும் சர்கார் முழு நேர அரசியல் வருகைக்கு அறிகுறியா இருந்துச்சு.
ஆனா இந்த பக்கம் பாத்தா விஜய் எந்த படம் நடிச்சாலும் பிரச்சன. உதாரனத்துக்கு காவலன் படம் வெளியாகும் போது சுறா படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்த கொடுக்கனும், துப்பாக்கி தலைப்பை மாற்றக் சொல்லி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்கு தொடர்ந்தது. தலைவா தி டைம் டு லீட்ன்னு இருந்த தலைப்பு நால அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுன்னு இப்ப வர பிரச்னைகள் வர தான் செய்யுது.
இருந்தாலும் அந்த நெஞ்சில் குடியிருக்கும்ன்ற விஜய் பேசும் வசனம் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். ஆடியோ லான்ச்ல விஜய் சொல்ற குட்டி ஸ்டோரிக்கு சருக்காத ஆளு இல்ல. படத்துக்கான எதிர்பார்ப்ப தாண்டி ஆடியோ லான்ச்ல விஜய் பேசுற குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் உச்சமா எதிர்பார்த்திட்டு இருப்பாங்க.
ஆழம் பாத்துதான் அரசியல் வருவேன்னு ஒரு மேடையில பேசின விஜய் தன்னோட ரசிகர்கள் மன்றங்கள விஜய் மக்கள் இயக்கம்மா மாத்தி மக்களுக்கு நல்லது செய்ய வெச்சு ஒரு வழியா தமிழக வெற்றி கழகம்ன்னு அதிகாரப்பூர்வ அரசியல் வருகைய காட்டிடாரு.
2026ல விஜய் அரசியல் வரதுல அவரது ரசிகர்கள் ஹேப்பியா இருக்காங்கன்னா இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் வருத்தத்துள்ள இருக்காங்கன்னு சொல்லலாம். ஏன்னா தளபதி 68ன்னு சொல்ற கோட் அப்பறம் தளபதி 69 இதுக்கு பிறகு எந்த படத்துலையும் நடிக்க மாட்டேன்னு முழு நேர அரசியல் வாதியா இருக்கபோறேன்னு சொன்னதால தயாரிப்பாளர்களுக்கு வருத்தம். ஏன்னா இந்தியாவுடை பாக்ஸ் ஆபிஸ் கிங் லிஸ்ட்ல விஜய்யும் ஒன்னு. இருந்தாலும் ரசிகர்கள் அவரு நடிக்காட்டினாலு ரீரிலீஸ் பன்னிவிடுங்கன அதுவே போதும் அண்னே அரசியல்ல இருந்து மக்களுக்கு நல்லது செய்யட்டோம்ன்னு சொல்லிகிட்டு இருக்காங்க.
ரைட்டு கமல்ஹாசன் மாதிரி ட்விட்டர் அரசியல்லா மட்டும் இல்லாம கள அரசியல்லா இறங்குவாரான்னு ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்திட்டு இருக்காங்க.