கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டுமென மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக உதகைக்கு வருகை புரிந்தார்.
சேரிங்கிராஸ் பகுதியில் பாஜகவினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், 2-ஜி வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா விரைவில் சிறை செல்வார் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கள்ளச்சாரய விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.