கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் 5 பேரை கடித்த தெரு நாயை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தக்கலையில் உள்ள மார்க்கெட் சந்தையில் பல கடைகள் இருப்பதால் நாள்தோறும் ஏராளமான மக்கள் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காய்கறி வாங்க வந்த சுலோக்சனா, சாந்தி ஆகிய இருவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்துள்ளது.
இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதனைத்தொடர்ந்து சிறுமி ஸ்ரீனிகா, லிங்கம், ஜினி ஆகிய 3 பேரையும் அதே நாய் கடித்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஸ்ரீனிகா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாயை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.