இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில் 163 ரன்களை சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து 164 ரன்களை இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.