உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
சூப்பர் 8 சுற்றில் குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும், குரூப்-2ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் குரூப் 1-ல் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.