சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் குறைந்து 96 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.