ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் பல இடங்கள் சேதமடைந்து உள்ளது.
இந்நிலையில் ரஷியாவின் தாக்குதல்களால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே ‘ஜெனரேட்டர்கள்’, ‘பவர்பேங்’ மற்றும் ‘பிளாஷ்லைட்’ ஆகியவற்றின் உதவியுடன் வாழ பழகி வருவதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர்.