உலக யோகா தினத்தை ஒட்டி தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே ஏராளமான சிறுவர் சிறுமிகள் தொடர்ச்சியாக யோகா செய்து கின்னஸ் சாதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உலக யோகா தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் காப்பகத்தை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் யோகாசன செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சாதனை முடிவடையும் போது அனைவருக்கும் அகில இந்திய உலக சாதனை அமைப்பின் சார்பில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.