வேலூரில் போதைப் பொருள்களின் ஒழிப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் போதைபொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் போதைபொருள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது எனவும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.