மும்பையில் நடிகர் அனுபம் கெர் அலுவலகத்தில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் அனுபம் கெர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து 4 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தின் நெகட்டிவ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி மஜீத் ஷேக், முகமது பஹ்ரீம் கான் ஆகியோரை கைது செய்துள்ளனர்.