பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சந்தித்துப் பேசியுள்ளார்.
டெல்லியில் அத்வானி இல்லத்தில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றதாக ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக ஹர்தீப் சிங் புரி பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.