சிவகாசி அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த மே 9ம் தேதி நடந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரும், மத்தியசேனை பகுதியயைச் சேர்ந்த இந்திரா என்பவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வந்த இந்திரா அதிகாலை உயிரிழந்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 2 பெண்கள் 45 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.