18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் நாளை தொடங்கி வரும் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தோ்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாா்.
இதனைத் தொடர்ந்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் நாளை தொடங்கி வரும் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயருக்கான தோ்தல் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.