கேரள மாநிலம் வெங்கனூர் பூர்ணிமா கவி கோயிலுக்கு பீட்டா அமைப்பு சார்பில் இயந்திர யானை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கோயிலில் திருவிழாவின்போது யானைகள் பயன்படுத்தப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி, இந்த முடிவை பீட்டா அமைப்பு மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், கோயிலுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது இயந்திர யானை இது என்றும், இதற்கு நடிகை அடாசர்மா நிதியுதவி செய்ததாகவும் பீட்டா அமைப்பின் அவசரநிலை மீட்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுட்டி ராஜீவ் தெரிவித்துள்ளார்.