கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மெத்தனால் விற்னை செய்த மாதேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தடை செய்யப்பட்ட மெத்தனால் உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கவுதம், பான்ஜிலால், ராம்குமார் மற்றும் பரமசிவம் ஆகிய நால்வரை காவல்துறையினர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரைக்கு சுமார் 330 லிட்டர் மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
மாதேஷுக்கும், வடபெரும்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நால்வரும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .