திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உலக ஒலிம்பிக் தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், இளைஞரணி தலைவர் நரேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆண்களுக்காக 7 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்காக 5 கிலோ மீட்டர் தூரமும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.