முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்வை மாணவர்களின் நலனை சிறிதும் கருத்தில்கொள்ளாமல் கடைசி நேரத்தில் ஒத்திவைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஒத்திவைப்பு குறித்த மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மன உளைச்சலை கொடுத்திருப்பதாகவும், மேலும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் எனவும் அன்புமணி பதிவிட்டுள்ளார்.
ஆகவே, நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.