நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரும் தப்ப முடியாது என மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேசிய தேர்வுகள் முகமை இயக்குநர் சுபோத் குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்தவும் உயர்நிலைக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்த ஒருவரும் தப்ப முடியாது என்றும், சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.