மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் இனியவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பேச்சால் தமிழக பாஜக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக கூறி தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் இனியவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 3 நாட்களில் விரிவான அறிக்கையாக அனுப்புமாறும் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.