கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் மெளனம் காப்பது வியப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 32 பட்டியலின மக்கள் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இறப்பு அல்ல, கொலை என்றும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடந்தை என்று கூறிய சம்பித் பத்ரா, அவரது சார்பில் யார் பதிலளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.