கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குறித்து விசாரணையை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 56 பேர் உயரிழந்துள்ளதாக கூறினார். 200க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் குரல் எழுப்பாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு நடத்தும் ‘டாஸ்மாக்’ கடைகளில் உரிமம் பெற்ற மதுபானம் கிடைக்கும் நிலையில், கள்ளச்சாரயம் எப்படி கிடைத்தது எனறும் அவர் வினவினார்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.