தமிழகத்தில் மருந்துக்கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் சென்றும் ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், குடிக்க கூடாது என்று சொல்வதற்கு பதிலாக அளவாக குடியுங்கள் என சொல்லக்கூடிய நிலை உள்ளதாக தெரிவித்தார். எந்த அரசு சாராயம் விற்க அனுமதித்தாலும் அது தவறுதான் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.