கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலி காரணமாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து வியாபாரிகள் சங்கத்தின் 4-ம் ஆண்டு மாநில மாநாடு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் திமுகவினரே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தான் அவர்களைக் கைது செய்ய போலீஸார் தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.