பிலிப்பைன்ஸ் மீது போர் தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என அந்நாட்டு அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சீனா நடத்திய தாக்குதலில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மீதும் பிலிப்பைன்ஸ் போர் தொடுக்காது என்றும், அதேசமயம் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்’ என பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.