அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மகன் மற்றும் மனைவி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 27சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து அறிந்த தமிழரசன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.