ஒடிசா முதல்வரான பின், தனது சொந்த கிராமத்துக்குச் சென்ற மோகன் சரண் மாஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்ற நிலையில், தனது சொந்த ஊரான கெண்டுஜர் மாவட்டம் ராய்க்கேலா கிராமத்துக்கு முதல்முறையாக சென்றார்.
அப்போது பழங்குடியின பெண்கள் தங்களது மரபுப்படி, மோகன் சரண் மாஜி பாதத்தைக் கழுவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, முதல்வருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.