விருதுநகரில் மண்ணுளிப் பாம்பு விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் வைத்து மண்ணுளிப்பாம்பு விற்பனை நடைபெறுவதாக வன குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விருதுநகர் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சுரேஷ் என்பவரின் வீட்டில் நான்கரை கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு இருந்தது தெரியவந்தது.
பாம்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் விற்பனையில் ஈடுபட்ட சுரேஷ்,ஞானசேகர், அர்ஜுனன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.