ராணிப்பேட்டை அருகே செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை அதிகாரிகள் மீட்டனர்.
புளியங்கன்ணு கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், அதே பகுதியில் செங்கல் சூலை நடத்தி வருகிறார்.
இந்த செங்கல் சூலையில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை மீட்டு சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, செங்கல் சூளை உரிமையாளர் சுரேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.