கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்காத இண்டியா கூட்டணி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்துவது போல வேஷம் போடுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தபோது அமைதி காத்து வந்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது போல போலி வேஷம் போடுவதாக என விமர்சித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.