கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டுமென ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தனர்.
அப்போது, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவரங்களை, ஆளுநரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் கள்ளச்சாராய விவகாரத்தை தமிழக அரசு முறையாக கையாளவில்லை எனவும், இந்த மரணங்களில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.