சாதி வாரியாக உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசு மறுப்பதாக பாமக சட்டப்பேரவை குழு தலைவர் ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி வாரியாக உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அனுமதி இருந்தும் மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என சபையில் பேசுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி நலிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனவும் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.