பெரம்பலூர் அடுத்த வி.களத்தூரில் இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது வாகனத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கண்ணதாசன், பாலச்சந்திரன், யோகேஷ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், 9 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.