புதுக்கோட்டை மாவட்டம் குடுவையூர் கிராமத்தில் சாலை வசதி அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில் முறையாக சாலை வசதி இல்லை எனவும் மழைக் காலங்களில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.