டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீசை கடைசி ஓவரில் வீழ்த்தி அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.
பின்னர் மழை காரணமாக 17 ஓவர்களில் 123 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தென் ஆப்பரிக்கா அணி களமிறங்கியது. ஆட்ட இறுதியில் 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறி அசத்தியுள்ளது.