தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கொரியாவில் ஹ்வாசோங் நகரில் உள்ள லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் 2-ஆவது தளத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அந்த தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் வேலைபார்த்து வந்த நிலையில், 20 பேர் தீ விபத்தில் உயிரிழந்தனர். 78 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.