கேரளாவில் 3 பசுக்களை கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே புலி நடமாட்டம் இருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
குறிப்பாக கெனிச்சிரா பகுதியில், சாபு என்பவரின் வீட்டில் இருந்த பசுவையும், பென்னி என்பவர் வளர்ந்து வந்த 2 பசுக்களையும் புலி கொன்றுள்ளது.
புலி வந்து சென்றதை சாபு தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, வனத்துறையினரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து, சாபு என்பவரின் வீட்டில் கூண்டு வைத்த வனத்துறையினர், புலி கொன்ற பசுவின் உடலையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் சாபு வீட்டிற்கு வந்த புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பல நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.