குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி அரியலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
காமராஜர் திடல் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.