ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் தர்காவில் 123ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூக்கி வந்தனர். அதனைத்தொடர்ந்து தர்காவின் மக்பராவுக்கு சந்தனம் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.