மாநிலங்களவை பாஜக குழு தலைவராக ஜெ.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவரும், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான நட்டாவுக்கு கூடுதல் பொறுப்பாக மாநிலங்களவை பாஜக குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது பியூஷ் கோயல் மாநிலங்களவை பாஜக குழு தலைவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.