சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி ரீதியான வன்முறைகளை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், நீதியரசர் சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கிழித்தெறிந்தார். மேலும், கூட்டத்தில் இருந்தும் வெளியேறினார்.