திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சியில் கடந்த 11-ம் தேதி முதல் சர்வதேச விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் விமான நிலைய இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இதே போல கோவை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.