ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே அடுத்தடுத்து வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மலரட்டா பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்த வீடுகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. பொருட்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.