தமிழகத்துக்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தர வலியுறுத்தி தஞ்சாவூரில் வரும் ஜூலை 5ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணம் அடுத்த கணபதி அக்ரகாரத்தில் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும், பயிர்கள் சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.